PUBLISHED ON : பிப் 17, 2017

அ நிறம் | அளவு
நான், ஆறாம் வகுப்பு படித்தபோது, நானும், என் பாட்டியும் கோவிலுக்கு நடந்து சென்றோம். திடீரென்று, 'ஆம்புலன்ஸ்' எங்களை கடந்து சென்றது.
உடனே நான், கடவுளை வணங்கினேன். அதை பார்த்து, 'ஏன் கடவுளே வணங்கினாய்' என்று கேட்டார் பாட்டி. 'ஆம்புலன்ஸ், தீ அணைக்கும் வண்டி, உயிருக்கு போராடி கொண்டு இருப்பவர்களை மீட்க செல்வதால், நாம் உடனே வழி விட வேண்டும்; அதுமட்டுமல்ல அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வகுப்பாசிரியர் சொல்லி தந்திருக்கிறார்' என்றேன். உடனே பாட்டி என்னை பாராட்டினார்.
அன்று வகுப்பு ஆசிரியர் கூறியது, இன்றும், ஆம்புலன்ஸ் வந்தால், உடனடியாக வழி விட்டு, அவர்களை காப்பாற்றும்படி மனதிற்குள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். என் குழந்தைகளுக்கும் பேரன், பேத்திகளுக்கு இதை சொல்லி கொடுத்திருக்கிறேன்.
- எஸ்.ஜெயலட்சுமி, மதுரை.
