/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்!
/
ஹார்ட்... ஹார்ட்... போட்டோ பிரேம்ஸ்!
PUBLISHED ON : ஜூன் 10, 2016

தேவைப்படும் பொருட்கள்: ஊதா வண்ண காருகேட்டட் கார்டு, பென்சில், சிசர்ஸ், சிறிய கத்தி, பிங்க் நிற கம்பளி, வண்ண வண்ண சிறு முத்துக்கள், நீல வண்ண காருகேட்டட் கார்டு, க்ளு.
இப்போ செய்யலாமா?
* ஊதா வண்ண காருகேட்டட் கார்டை ஒரு அழகான ஆர்ட்டின் வடிவத்தில், 'கட்' செய்து கொள்ளவும். மேலும், உட்பகுதியிலும் ஒரு ஆர்ட்டினை வரைந்து, 'கட்' செய்து கொள்ளவும்.
* 'பிங்க்' நிற கம்பளியை ஒரு செ.மீட்டர் அகலத்தில் நீளமாக, 'கட்' செய்து, உட்புறம் கட் செய்துள்ள ஆர்ட்டினின் விளிம்பில், 'க்ளு'வை பயன்படுத்தி ஒட்டவும். பிறகு வண்ண வண்ண சிறிய முத்துக்கள், பட்டன்களை சீரான இடைவெளியில் அழகாக ஒட்டவும்.
* இப்போது நீல நிற காருகேட்டட் கார்டை உட்புற ஆர்ட்டின் வடிவத்தை முழுமையாக மூடுகிற அளவில் சதுரமாக வெட்டி, மேற்புறம் தவிர்த்து (போட்டோவை மேற்புறமாக செருக வேண்டியுள்ளதால்) மீது மூன்று பக்கங்களிலும் க்ளுவை பயன்படுத்தி ஒட்டவும்.
* இந்த அழகிய போட்டோ பிரேமிற்கு ஸ்டாண்டை உருவாக்க இன்னொரு நீல நிற காருகேட்டட் கார்டை உயரமாக வெட்டி, மேற்புறம் மட்டும் க்ளுவை பயன்படுத்தி போட்டோ பிரேமின் பின்புறம் ஒட்டவும்.
இப்போ இந்த அழகிய பிரேமில் உங்களுக்கு பிடித்த உங்க பேரன்ட்ஸ் போட்டோவை வைத்துவிடுங்கள் குட்டீஸ். யாராவது இந்த பிரேம் எந்த ஸ்டூடியோவில் வாங்கியது என்று கேட்டால் உங்கள் பெயரை சொல்லி ஸ்டூடியோவை சேர்த்துக்கொள்ளுங்கள்!

