PUBLISHED ON : ஜூன் 13, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
முறுக்கு மாவு - 500 கிராம்
ஓமவல்லி இலை, முருங்கை கீரை, கருவேப்பிலை, துளசி - தலா, 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
நெய் - 2 தேக்கரண்டி
எள், உப்பு - சிறிதளவு
எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
ஓமவல்லி, முருங்கை, கருவேப்பிலை, துளசி இலைகளை, பச்சை மிளகாயுடன் நன்றாக அரைக்கவும். அந்த கலவையில் சுடுநீர் கலந்து வடிகட்டவும்.
முறுக்கு மாவுடன் எள், உப்பு, நெய் கலந்து, வடிகட்டிய மூலிகை நீர் ஊற்றி பிசையவும்.
பிசைந்த மாவு, 15 நிமிடங்கள் ஊறிய பின், முறுக்கு அச்சில் பிழிந்து, கொதிக்கும் எண்ணெயில் வேக வைக்கவும். சுவை மிக்க, 'மூலிகை முறுக்கு' தயார். மணம் கமகமக்கும். அனைவரும் விரும்பி உண்பர்.
- எஸ்.ஜி.குருபாக்கியம், விருதுநகர்
