PUBLISHED ON : ஜூலை 29, 2011

ஜப்பானில் பெண் குழந்தைகளுக்காக கொண்டாடப்படும் திருவிழாவை 'ஹினா மட்சூரி' என்று சொல்வர். இத்திருவிழா பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து மார்ச் 3ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
நாம் நவராத்திரியில் கொலுப்படிகள் கட்டி விதவிதமாக கொலுபொம்மைகள் வைத்து அலங்கரிப்பதைப் போலவே, ஜப்பானியர்களும் ஏழு அல்லது ஐந்து என்று கொலுப்படிகள் அமைத்து (படிகள் ஒற்றை எண்ணில் இருக்க வேண்டியது அவசியம்) அப்படிகளை உயர்ரக ஜரிகை வேலைபாடுகள் செய்யப்பட்ட சிவப்பு நிற வெல்வெட் துணியால் மூடுகின்றனர். இத்துணியின் நுனியில் வானவில்லின் நிறங்கள் கொண்ட ஜரிகை கோடுகள் இருக்க வேண்டும்.
இப்படிகளில் வைக்கப்படும் பொம்மைகள் எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு சில நியதிகள் உண்டு... பொம்மைகளை படிகளில் வைக்கும் போது இடமிருந்து வலம்தான் வைக்க வேண்டும்.
பிப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த கோலாகல திருவிழா மார்ச் மாதம் 3ம் தேதியுடன் முடிக்கப்பட்டு விட வேண்டும். மார்ச் மாதம் 4ம் தேதிக்குள் அனைத்து பொம்மைகளையும் அப்படியே சுருட்டிக்கட்டி எடுத்துப் போய் கடலில் வீசிவிடுகின்றனர். குறிப்பிட்ட 4ம் தேதிக்குள் பொம்மைகள் எடுக்கப்படாவிட்டால் பெண் குழந்தைகளுக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே போகும் என்ற அசையாத நம்பிக்கை அவர்களிடையே நிலவுகிறது.
கொலுவில் வைக்கப்பட்ட அனைத்து பொம்மைகளும் நடுக்கடலில் வீசப்படுவதால் இனி, இக்குழந்தைகளை எவ்வித துர்தேவதையும் அண்டாது; தீய சக்திகளும் இப்பொம்மைகளுடன் கடலுக்குள் போய்விடும் என்று நம்புகின்றனர்.
முதல்படியில் கையில் செங்கோல் ஏந்திய மன்னர்... அவர் அருகில் கையில் மிக அழகிய விசிறியுடன் மகாராணியின் பொம்மை.
