தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹிட்லர் - மர்மம் (2)

ஹிட்லர் - மர்மம் (2)

ஹிட்லர் - மர்மம் (2)


PUBLISHED ON : ஜூலை 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''பூமிக்கடியில் அமைந்திருந்தாலும் அது பதுங்குக் குழியாக மட்டும் காட்சியளிக்கவில்லை. மிகப்பெரிய கட்டடங்களுடன், ஏராளமான அறைகளுடன் அனைத்து வசதிகளும் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.

''ஹிட்லருக்குத் தனியறை, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தத் தனியறை, அவருக்கு நல்ல வசதிகள் நிரப்பப்பட்ட படுக்கையறை, சமையலறை, சாப்பாட்டு அறை, மருத்துவர் களுக்கு பிரத்யேக அறை, குளியலறை, உடைமாற்றும் அறை என்று அனைத்து வசதிகளுடன் பிரமிப்பை ஏற்படுத்தத்தக்க வகையில் அந்தப் பதுங்குக் குழி அமைந்திருந்தது.

''தற்கொலை செய்துகொள்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 25ம் தேதி தனது நம்பிக்கைக்குரிய ஹாம்லிங் என்பரைத் தன் அறைக்கு வரவழைத்த ஹிட்லர் மனம் விட்டு அவரிடம் பேசினார்.

'நானும், இவாவும் தற்கொலை செய்வது என்று முடி வெடுத்துவிட்டோம். நாங்கள் இறந்த பின்னர், எங்கள் உடல் களை ஒரு போர்வையில் சுருட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துவிட வேண்டியது உன் பொறுப்பு. பின்னர் எனது அறையில் உள்ள கோப்புகள், கடிதங்கள், ஆடைகள், பேனா, கண்ணாடி என்று என் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்று விடாமல் எரித்துவிடு' என்று கூறினார்.

''அதாவது அவரது மரணத்திற்குப் பிறகு ரஷ்யர்களால் அவரது உடலோ அல்லது அவர் சார்ந்த எந்தப் பொருளுமோ அவமானப்படுத்தப் படுவதை அவர் விரும்பவில்லை என்பதே இதன் அர்த்தம்.

''ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல்நாள், ஏப்ரல் 29ம் தேதி திடீரென்று ஒவ்வொரு அறைக்கும் வருகை தந்தார். அங்கிருந்தவர்களுடன் வலிந்து வரவழைத்த புன்னகையுடன் கைகுலுக்கினார். அப்போது அவர் முகம் சற்று இறுகிய தோற்றத் துடனேயே காட்சியளித்தது.

''பின்னர் மறுநாள் அவரது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். அப்போது அறைக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகப் பலரும் கூறினர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியாமல் இருந்தது.

''அப்புறம்தான் சிலர், ஹிட்லர் தனது வாயில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரது மனைவி இவா பிரான் கொடிய சயனைட் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிவித்தனர். அங்கிருந்த அனைவரின் முகமும் பீதியிலும், சோகத்திலும் நிறைந்திருந்தது.

பின்னர் ஹிட்லர் மற்றும் அவர் மனைவியின் உடல் களை ஹிட்லரின் விருப்பப் படியே கம்பளிப் போர்வை யில் சுற்றி, தலைமைச் செயலகத்தின் தோட்டத்தில் எரித்துவிட்டதாகவும் சிலர் கூறினர்.

மேலும், அவரது விருப்பத்திற்கேற்ப ரகசிய டைரி, முக்கிய கோப்புகள், கண்ணாடி, பேனா போன்ற அவர் பயன்படுத்திய அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

தனது மரணம் மே மாதம் 5ம் தேதி அன்று நிகழாமல் போனதில் ஹிட்லருக்கு மன வருத்தம் உண்டு. காரணம் அந்த நாள், அவர் பெரிதும் மதிக்கும் மாவீரன் நெப்போலியன் இறந்த தினமாகும்.

அதேபோல ஹிட்லரின் வலது கரமாகவும்,நாஜிக் கட்சியின் பிரசாரப் பீரங்கியாகவும் கருதப்பட்ட கோயபல்சுக்கு ஆறு குழந்தைகள் உண்டு. அவர்கள் அத்தனைபேரும் அத்தனை அழகாகவும், சுறு சுறுப்பானவர்களாகவும் இருந்தனர்.

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அந்தக் குழந்தைகள் அனை வரையும் கொல்லத் தீர்மானித்தார் கோயபல்ஸ். ஆனால், இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

'குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்? அவர்களை ஏன் கொல்ல வேண்டும்?' என்று அவரிடம் முறையிட்டனர்.

ஆனால், அதற்கு கோயபல்ஸ், 'இவர்கள் என் குழந்தைகள். எனக்குச் சொந்த மானவர்கள். அவர்களை என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு' என்று கோபமாகப் பதிலளித்தார்.

அப்படியே, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட மறுநாள், ஆறு குழந்தை களுக்கும் சயனைட் கலந்த உணவினைக் கொடுத்துக் கொன்றுவிட்டு, அவரும், அவர் மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர்.

இப்படித்தான் ஏகாதிபத்யவாதிகளும், சர்வாதிகாரிகளும், தாங்கள் மட்டு மல்லாமல் தங்களைச் சார்ந்திருப்போர் களையும் துயரமான மரணப்பிடிக்குள் கொண்டு தள்ளிவிடுகின்றனர்.

இதுதான் உலக நீதியாகவும் உள்ளது.

இதனிடையே அடுத்த நாள், அதாவது மே மாதம் 1ம் தேதி ஜெர்மனியின் வானொலி, 'ஹிட்லர் தற்கொலை செய்து மாண்டு விட்டார்' என்ற செய்தியை அறிவித்தது. அதற்கு அடுத்த நாளே, அதாவது மே மாதம் 2ம் தேதி அன்று ஹிட்லர் இருந்ததாகச் சொன்ன பங்கரை ரஷ்யா கைப்பற்றியது. அத்தோடு ஹிட்லர் சம்பந்தமாகத் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கையும் வெளியிடப்பட்டது.

எனினும் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் ஹிட்லரின் உடல் கிடைத்ததாகச் சொல்லி, அந்த உடலுடன் வீரர்கள் நின்று எடுத்துக் கொண்ட படங்களையும் ரஷ்யா வெளியிட்டது.

சம்பவம் நடந்து இரண்டொரு நாட்களிலேயே தங்கள் வசம் கிடைத்தது ஹிட்லரின் உடலல்ல என்றும், அவர் தனக்கென வைத்திருந்த 'டூப்' என்றும் ஒரு அதிர்ச்சித் தகவலை அறிவித்தது ரஷ்யா.

- தொடரும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us