PUBLISHED ON : ஜூலை 11, 2014

ஹிட்லர் தனக்கென்று சில டூப்களை வைத்திருந்தார். அவர்கள் அசப்பில் ஹிட்லரைப் போலவே இருப்பர்.
1944ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற இருந்த பேரணி ஒன்றின்போது ஹிட்லரைத் தீர்த்துக் கட்ட ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதேபோல பேரணி நடந்த போது, அதில் தலைமை தாங்கி வந்து கொண்டிருந்த ஹிட்லரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்துவிட்டார். இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக முன்னூறுக்கும் அதிகமானோர் பொதுமக்கள் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்குப் பிறகுதான் டூப் வைத்துக் கொள்ளும் யோசனை ஹிட்லருக்கு ஏற்பட்டது. மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தனக்குப் பதிலாக இந்த டூப்களையே அனுப்பி வைப்பது அவரது வழக்கமாக இருந்தது. சுமார் ஆறு பேர் அவரது டூப்பாக இருந்ததாகத் தெரிகிறது.
இந்த டூப்களில் ஒருவர்தான் இறந்த தாகவும், அவரது உடலைத்தான் ரஷ்யா கைப்பற்றியதாகவும் செய்தி பரவியது.
எனவே இதனையடுத்து ஹிட்லர் இறந்து போனார் என்பதை உலகிற்கு அறிவித்தே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த ரஷ்யா, ஹிட்லர் மற்றும் அவரது மனைவி இவாவின் எரிந்த நிலையில் காணப்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டு விட்டதாக உறுதியான தகவலைக் கூறி உலகம் முழுவதும் நிலவிய பரபரப்பிற்கும், சந்தேகத்திற்கும் முடிவு கட்டியது.
இறுதியாக 1993ம் ஆண்டு ஹிட்லரின் இறப்பு சம்பந்தமான கடைசி அறிக்கையை ரஷ்யா வெளியிடட்டது. அதில் 'ஹிட்லர் கடைசியாக அமர்ந்துகொண்டு தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட ரத்தக் கறை தோய்ந்த சோபாவையும், குண்டு துளைத்த அவரது மண்டை ஓட்டை யும் தற்போதும், பாதுகாத்து வருவதாகக் கூறப்பட்டது.
ஹிட்லர் இறந்ததற்கான காட்சியாக உள்ள ரத்தக்கறை மற்றும் மண்டையோட்டை டி.என்.ஏ., உள்ளிட்ட சில சோதனைகளைச் செய்து பார்த்தால் உண்மையைக் கண்டு பிடித்து விடலாம் என்று தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் நிக் பெலன்டோனி என்பவர் ஆய்வு மேற்கொண்டார். அதனை நடத்துவதற்கு ரஷ்ய அரசு அவருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித் திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவற்றைப் பல்வேறு வகையில் புகைப் படங்கள் எடுத்தும், மாதிரியைச் சேகரித்துக் கொண்டும் அமெரிக்கா வந்த டாக்டர் நிக், சோதனை செய்து பார்த்ததில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மைகள் வெளியாகின.
அதாவது அந்த சோபாவில் இருந்த ரத்தக் கறைக்கும், மண்டையோடுக்கும் டி.என்.ஏ., பரிசோதனையில் எந்த பொருத்தமும், இருக்கவில்லை. அதாவது அந்த சோபாவில் இருந்த ரத்தக் கறை ஒருவருடையதாகவும், மண்டையோடு ஒருவருடையதாகவும் இருந்தது.
மேலும், அந்த மண்டையோடு ஒரு ஆணுடையதே அல்ல என்றும், அது ஒரு பெண்ணுடையது என்றும் சோதனையில் தெரியவந்தது.
அந்த மண்டையோடு மிகவும் இளமை யான ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது என்றும், அதாவது குறைந்த பட்சம் 20 வயதிலிருந்து, அதிகபட்சம் 40 வயது வரையிலான ஒருவரது மண்டையோடு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இறக்கும்போது ஹிட்லருக்கு வயது 55. எனவே, மாஸ்கோவில் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரப்பட்ட சாட்சியங்கள் போலியானது என்றும், அது ஹிட்லருடையதே அல்ல என்றும் உறுதிபடுத்தப் பட்டது.
ஆக, ஹிட்லரின் மெய்க்காப்பாளர் ரோஹுஸ் மிஷ் சொன்னவை அனைத்தும் பொய் என்பது ருசுவானது.
அதாவது தனது தலைவனுக்காக அவர் சொல்லச் சொன்ன வசனங்களை மிகச் சரியாகச் சொல்லி நடித்துக் காட்டியிருக்கிறார் மிஷ் என்பதே இதிலிருந்து தெரியவந்தது.
அப்படியானால் ஹிட்லர் என்ன ஆனார்?
கடைசி நேரத்தில் அவர், தன் மனைவியுடன் எப்படித் தப்பித்தார்? எங்கே சென்று பதுங்கினார்?
றட்லர் இறந்து விட்டதாக உலகமே சொல்லிக் கொண்டிருந்தபோது சோவியத் ரஷ்யாவின் அதிபரும், இரும்பு மனிதர் என்று அழைக்கப் பட்டவருமான ஸ்டாலின் மட்டும் ஹிட்லர் சாகவில்லை தப்பிவிட்டார் என்று திட்டவட்டமாகக் கூறினார். அதுவும் முக்கியப் பெரும் தலைவர்களான ட்ரூமன் மற்றும் சர்ச்சில் ஆகியோரிடம் இதனை அவர் தெரிவித்தார்.
எனவே, ஹிட்லர் இறக்கவில்லை என்ற விவரம் இதன் மூலம் மீண்டும் துளிர்விட்டது. அதுபற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் ரஷ்யாவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ 700 பக்க அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அதில் ஹிட்லர் தப்பிவிட்டது பற்றி விளக்கப் பட்டிருந்தது.
அந்த அறிக்கை மற்றும் ஹிட்லர் தப்பியதாக உலவும் தகவல்கள் ஆகியவற்றைத் திரட்டிப்பார்த்தால், அது உண்மை என்றே தோன்றுகிறது.
அது என்னவென்று தெரியுமா?
- தொடரும்.
