தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஓட்டைப் பானை!

ஓட்டைப் பானை!

ஓட்டைப் பானை!


PUBLISHED ON : ஜூலை 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்திலி என்ற அழகிய கிராமத்தில், வாழ்ந்து வந்தார் ஏழை விவசாயி. அவர், தினமும் வீட்டுத் தேவைக்காக, குளத்தில் தண்ணீர் எடுப்பார்.

நீள கழியின் முனைகளில், தண்ணீர் நிரம்பிய பானைகளை தொங்க விட்டு, தோளில் சுமந்து செல்வார்.

ஒரு முனையில் தொங்கிய பானையில், சிறு ஓட்டை இருந்தது. அதன், வழியெல்லாம் தண்ணீரை சிந்தியபடி இருந்தது. அந்த பானையில், பாதியளவு நீரே வீடு வந்து சேரும். இதை கேவலமாக பேசியது, முழு பானை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் -

கேலியைப் பொறுக்க முடியாத ஓட்டை பானை, 'ஐயா... என் குறையால், வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப்பளு அதிகரிக்கிறது; என் ஓட்டையை சரி செய்து, வருத்தத்தை தீர்த்து வையுங்கள்...' என்று விவசாயியிடம் முறையிட்டது.

இதைக் கேட்டு, 'பானையே... ஒன்றை கவனித்தாயா... தண்ணீர் எடுத்து வரும் பாதையில், உன் பக்கம், அழகான பூச்செடிகளைப் பாத்தாயா... ஓட்டை வழியாக தண்ணீர் சிந்துவதால், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்திருந்தேன்...

'நீ சிந்தும் தண்ணீரில், வளர்ந்துள்ள செடிகள், தினமும் அழகாக பூக்கின்றன. அவற்றால், வீட்டை அலங்கரிக்கிறேன்... மீதமுள்ளவற்றை விற்று, பணம் சம்பாதிக்கிறேன்; உன்னால் தான் எனக்கு பெரும் நன்மை...' என்றார் விவசாயி.

ஓட்டை பானைக்கு பெருமிதம் ஏற்பட்டு, கவலையை நிறுத்தியது. அடுத்தவர் பேசுவதைப் பற்றிக் எண்ணாமல், வேலையை கருத்துடன் செய்யத் துவங்கியது.

வழியெங்கும் அழகிய பூக்களை, தினமும் ரசித்து மகிழ்ந்தது. இதைக் கண்ட முழு பானையின் முகம் சுருங்கியது. அது, ஓட்டைப்பானையை கேலி செய்வதை நிறுத்தியது.

குட்டீஸ்... எப்பவும், யாரையும் தரக்குறைவாக பேசக் கூடாது; அவர்களால், மற்ற நல்லவர்களுக்கும் நடக்கும் நன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்.அர்ச்சனா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us