PUBLISHED ON : பிப் 28, 2014

உறைய வைக்கும் குளிர் காற்று தரை அருகே படர்ந்து இருக்கும். அப்போது அதன்மேல் பெய்யும் மழை அதன் வழியே ஊடுருவி தரையை தொடும்போது பனிக்கட்டி மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ மாறி பெய்யும். காற்றின் வெப்பநிலை 0 டிகிரி செல்ஷியஸ். அருகே இருக்கும் மூடுபனி நாளின் கதையில் இன்னமும் ஆச்சரிய விளைவுகள் ஏற்படும். காற்றில் வரும் மழை துளிகள், ஏற்கெனவே குளிர்ந்து இருக்கும் மரக்கிளைகள், கம்பங்கள் ஆகியவைகளின் மேல் விழுகையில் விதவிதமான உருவ அமைப்புகளாக மாறும். இந்த உருவ அமைப்புகள் ஐஸாய் தண்ணீர் மாறும் சூழலுக்கு ஏற்ப மேலும் வளரும். காற்று வீசுகையில் இந்த பனி படலம் மரம் முழுக்க பரவி மரமே பனி ஆடை அணிந்து காட்சி அளிக்கும்.
மலை சரிவுகளில் உறைபனி!: காற்றால் அடித்து வரப்பட்ட தண்ணீர் துளிகள் பைன் மரத்து கிளைகளில் மோதி மிக விநோத உருவங்களை ஏற்படுத்தும். மலைச் சரிவில் இருக்கும் பைன் மரம் எப்படி வடிவமெடுத்து இருக்கிறது என மேலே பாருங்கள். தண்ணீர் துளிகள் உறைந்து ஐஸாகியபின், அவை பனியால் மூடப்படுகிறது. பின்னர் வீசும் காற்றின் வேகத்தில் மறுபடியும் உருவங்கள் மரத்தின் பின்புறம் உருவாகி, முழு மரமும் பனிமரமாகும்.
'ஐஸ்' பூதம்!: ˆநூவ்வேறு விதமான வானிலை சூழல் வெவ்வேறு விதமான உறைபனி உருவங்களை மரங்களில் உருவாக்கும். உதாரணத்திற்கு, மிக குளிரும், மெல்லிய காற்றும் தண்ணீர் துளிகளை மரக்கிளைகளை நோக்கி நகர்த்தி செல்லும்போது ஐஸ் எளிதில் உடைய கண்ணாடி போல மரங் களின் மேல் படிகிறது. ஆயினும் காற்று வலிமையாகவும், வெப்ப நிலை மிக குறைவாகவும் இருக்கும் போது தண்ணீர் துளிகள் (குறிப்பாக அவை அளவில் பெரிதாக இருக்கும்போது) முழுவதுமாக உறைவதில்லை. அதற்குள் மற்ற துளிகள் அவைகள் மேல் விழும். இதனால், அவைகள் விழும் கிளைகளில் நீர் ஒழுகும். பின்னர் அவை உறைகையில் தெளிவான, ஒழுங்கற்ற ஐஸ் உருவங்கள் கிளைகளை உறுதியாக பற்றிக் கொண்டு உருவாகிவிடும்.
