தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தாகம் எப்படி ஏற்படுகிறது!

தாகம் எப்படி ஏற்படுகிறது!

தாகம் எப்படி ஏற்படுகிறது!


PUBLISHED ON : மே 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலில் நீரிழப்பு ஏற்படும் போது, மூளை உருவாக்கும் ஒரு உயிரியல் எச்சரிக்கை தான் தாகம்.

மனித உடலில், 70 சதவீதம் வரை நீர் உள்ளது. இது, ரத்த அழுத்தம், வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும், 'செல்' செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

உடலில், நீரின் அளவு குறையும் போது மூளையில், 'ைஹப்போதாலமஸ்' என்ற பகுதி உணர்கிறது. உடனே ரத்தத்தில் உப்பு செறிவை அதிகரித்து தாகம் என்ற உணர்வை துாண்டுகிறது.

நீரிழப்பு ஏற்படும் போது வாயில் உமிழ்நீர் உற்பத்தியும் குறைகிறது. இதை வாய் மற்றும் தொண்டையில் உள்ள, 'சென்சார்' என்ற உணரி அறிந்து, மூளைக்கு சமிக்ஞை அனுப்புகிறது. உடனே ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க செய்கிறது மூளை. இந்த செயல்முறை உடலில் நீர் இழப்பை தடுக்க உதவுகிறது.

தாகத்தின் தீவிரம் நீரிழப்பின் அளவை பொறுத்து மாறுபடுகிறது.லேசான நீரிழப்பின் போது தொண்டை உலர்ந்து, சோர்வு ஏற்படும்.

கடுமையான நீரிழப்பால் தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் ஏற்படும். அது உயிருக்கு ஆபத்தை கூட ஏற்படுத்தலாம்.

வெப்பமான கோடை காலநிலை, உடற்பயிற்சி, வியர்வை அதிகரிப்பு மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு நோய்கள், நீரிழப்பை அதிகரிக்கும்.

தாகத்தை தணிக்க, தண்ணீர் அல்லது, 'எலக்ட்ரோலைட்' கலந்த பானங்கள் பருகவேண்டும். ஒருநாளைக்கு, 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது, உடலை ஆரோக்கியமாக பேண உதவும். முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தாக உணர்வு குறைவாக இருக்கும். அவர்களுக்கு தண்ணீர் வழங்குவதில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

- வி.பரணிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us