PUBLISHED ON : ஜூலை 15, 2011

அ நிறம் | அளவு
அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா' செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய 'வைகிங்' என்ற விண்கூடு அனுப்பிய தகவல் நாடாக்கள் ஐந்து ஆண்டுகளாகப் பரிசீலிக்கப் பட்டத்தில், 'செவ்வாயில் மனிதர்கள் இருந்திருக்கலாம்' என்பதற்கான சான்றுகள் தெரிய வந்துள்ளன.
ஒரு மைல் நீள மனித முகம் போன்ற பொருட்கள் உள்பட பல்வேறு புதிரான பொருட்கள், கணித இயலின்படி உள்ள 5 பக்க பிரமிடுகள் ஆகியவை, 'வைகிங்' அனுப்பிய படங்களில் காணப்பட்டுள்ளன. இவை ஒரு நாகரிகச் சமுதாயத்தின் அழிவுகள் போல் உள்ளன. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைப் போல உயிரினங்கள் இருந்ததை நிரூபிப்பதாக உள்ளன.
