PUBLISHED ON : ஆக 05, 2016

பொங்கூசிப் பாறைகள் மற்றும் தொங்கூசிப் பாறைகள் என்பவை, ஒரு சுண்ணாம்புப் பாறைக் குகையின் மேல் கூரையிலிருந்து சொட்டு சொட்டாக வடியும் தண்ணீரால் உருவாகிறது. தண்ணீரில் கரைந்துள்ள கால்சியம் கார்பனேட், குகையின் கூரையிலிருந்து தொங்குகிற நீண்ட, உறைந்து தொங்கும் நீர்த்துளி - வடிவிலான படிமானங்களை உருவாக்கு கிறது. இவை தான் தொங்கூசிப் பாறைகள் என அழைக்கப்படுகின்றன.
தொங்கூசிப் பாறைகளிலிருந்து பெருங் குகையின் தரைக்குள் தண்ணீர் சொட்டு சொட்டாக வடிகையில், அத்தரையில் கால்சியம் கார்பனேட்டும் படிமானமாகி, பொங்கூசிப் பாறை என்று அழைக்கப் படுகிற குறுகலான குத்துாசியாக குவிய ஆரம்பிக்கிறது. காலப்போக்கில், பொங்கூசிப் பாறையும், தொங்கூசிப் பாறையும் உண்மையிலேயே ஒன்றை ஒன்று சந்தித்து, தரையிலிருந்து கூரை வரை ஒரு துாண் போன்ற அமைப்பை உருவாக்கி பார்ப்பவர்களை, 'வாவ்' என வாய்பிளக்க வைக்கிறது.

