PUBLISHED ON : டிச 07, 2012

இன்றைய காலகட்டத்தில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த கிரீன் டீ கேமிலியாசைனன்ஸிஸ் எனப்படும் தாவர இலைகளில் இருந்து கிடைக்கிறது. இதை மிதமான சூட்டில் தான் தயார் செய்ய வேண்டும். இந்த டீயில் ஆறு வகையான பாலிபீனால்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. இது உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கிறது. முகப்பரு, சரும அலர்ஜி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி. எலும்புகளை பலமடைய செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் இளமையையும், ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்கிறது. எபிகேலோ கேட்சின் மூளையின் செயல் திறனை அதிகரித்து, நினைவாற்றலை பெருக்கு கிறது. மேலும் கிரீன் டீ மன இறுக்கத்தை போக்கி, மூளையில் ஆல்பா அலைகளை தூண்டி மனதிற்கு அமைதியை தருகிறது.
இதை கர்ப்பிணி பெண்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது!
