
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியில், 1995ல், 10ம் வகுப்பு படித்தபோது, வேப்பங்காயாய் கசந்தது படிப்பு; தட்டுத்தடுமாறியபடி இருந்தேன்.
தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், 'படித்து முன்னேற வழியைப் பாரு...' என கண்டிப்பர் ஆசிரியர்கள். இதனால், மனதளவில் சோர்வடைந்தேன்.
சமூக அறிவியல் ஆசிரியர் சண்முகம் மிகவும் பரிவு காட்டினார்; நன்றாக படிக்க பல்வேறு வகையில் உற்சாகம் ஊட்டினார். இதழ்களில் வரும் நம்பிக்கை கதைகளையும் படிக்க தந்தார். கடுமையாக முயன்று, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன்.
படிப்பை முடித்து, அப்பாவுடன் மளிகை கடையில் பணிபுரிய துவங்கினேன். பகுதி நேரமாக பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அவை பிரசுரமானதால் உற்சாகம் பெற்றேன். ஆயிரம் படைப்புகளை தொடர்ந்து ஆர்வமுடன் எழுதி, எழுத்தாளராக உருவாகியுள்ளேன்.
தற்போது என் வயது, 40; தட்டுத்தடுமாறிய என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஆசிரியரை வணங்கி வாழ்கிறேன்.
- ஏ.ஜி.முகம்மது தவுபீக், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 88257 68085

