
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் அனார்கலி நாடகம் போட முடிவாயிற்று. ஹீரோவுக்கு தமிழ் தெரியாது. அதனால் அவனுக்கான ஓரிரு தமிழ் வசனங்களை ஆங்கில எழுத்துக்களில் டைப் அடித்து மனப்பாடம் செய்யக் கொடுத்துவிட்டனர். (உம்... அப்பா....APPA) தந்தையிடம் போராடுகிறான் ஹீரோ, 'நான் மணந்தால் அனார்கலியைத்தான் மணப்பேன்!' என்பது வசனம்.
ஆனால், டைப்பிங்கில், ANARKALI என்பதில் முதல் எழுத்தான A சற்று அழிந்து போயிருந்தது. எனவே, இவன் மேடையில், 'நான் மணந்தால் நாற்காலியைத் தான் மணப்பேன்!' என்று முழங்கினான். இதைக் கேட்டு, அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. டிராஜிடி நாடகம் காமெடியில் முடிந்தது. அதை இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.
- ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.