தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்...! (55)

இளஸ்... மனஸ்...! (55)

இளஸ்... மனஸ்...! (55)


PUBLISHED ON : ஆக 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ்...

சத்துணவு கூடத்தில், ஆயாவாக பணிபுரிகிறேன். கணவர், தமிழக அரசில் கடைநிலை ஊழியர். எங்களுக்கு, மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறாள். மற்ற இருவரும், 7 மற்றும், 5ம் வகுப்பில் படிக்கின்றனர்.

மூத்தவள், சுமாராக தான் படிப்பாள். தற்போது பேயறைந்தவள் போல் காணப்படுகிறாள். அவள் முகம், கை, கால்கள் மற்றும் அடிவயிறு வீங்கியிருக்கிறது. அடிக்கடி வாந்தி, மயக்கம் வருகிறது. கேட்டால், அடிவயிற்றை பிடித்தபடி அழுகிறாள்.

பள்ளிக்கு போக பிடிக்கவில்லை என்கிறாள். மருத்துவரிடம் போனால் செலவு அதிகமாகும் என பயப்படுகிறேன். பாட்டி வைத்திய முறைகளை செய்து சோர்ந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நிற்கிறேன். ஏதாவது வழி பிறக்குமா... என்று காத்திருக்கிறேன்.

கலக்கத்துடன் கவலையால் வாடும் அம்மா,

முதலில் நிதானமாகுங்கள். கவலையை விடுங்கள். பொதுவாக, பள்ளிகளில், கழிவறை இருப்பதில்லை. இருந்தாலும், சுகாதார குறைபாட்டுடன் காணப்படும். தகுந்த இடைவேளையில், மாணவியரை சிறுநீர் கழிக்க பள்ளிகளில் அனுமதிப்பதில்லை.

'ஆசிரியை திட்டுவார்' என பயந்து, சிறுநீர் கழிக்கும் உணர்வை அடக்கி வைக்கின்றனர் சிறுமியர். 15 வயது பெண்ணுக்கு, சிறுநீர் பையின் கொள்ளளவு அதிகபட்சம், 480 மி.லி., தான்.

அடக்குவதால் சிறுநீர் பாதையில், யூ.டி.ஐ., என்ற நோய் தொற்று ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பாக்டீரியா என்ற நுண்ணுயிரிதான்.

சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள்:

* எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு

* சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்

* சிறுநீரில் துர்நாற்றம்

* மேக நிறத்தில் சிறுநீர்

* சிறுநீரில் ரத்தம்

* இடுப்பு வலி.

சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்பட்டால், 'பிராஸ்டேட்' சுரப்பி வீங்கும். சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். கழிவுகள் ரத்தத்தில் கலக்கும்.

மகளை, அரசுமருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் காட்டி ஆலோசனை கேட்கவும்.

தொற்றை குணப்படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை முயற்சி செய்யலாம்.

* தாராளமாக நீரை குடிக்க கொடுக்கவும்

* தோன்றும் போதே சிறுநீர் கழித்துவிட அறிவுரைக்கவும்.

இது பற்றி வகுப்பு ஆசிரியையிடம் பேசு. பள்ளி கழிவறையையும் ஒருமுறை பார்க்கவும். அது சுகாதாரமாக இல்லையென்றால், தலைமையாசிரியையிடம் புகார் கொடுக்கவும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யலாம்.

மருத்துவர் ஆலோசனைபடி மருந்துகளை பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரை டவலில் ஒற்றி, அடிவயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம். சுத்தமான இறுக்கமற்ற ஆடைகளை அணியலாம். பருத்தியிலான உள்ளாடை மிக நல்லது. தினம் ஒரு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். பிறப்பு உறுப்பை மிக சுத்தமாக பராமரிக்க கற்றுக் கொடுக்கவும்.

காபி, தேநீர் அதிகம் குடிக்க கொடுக்க வேண்டும். சிறுநீர் சரியாக கழியவில்லை என்றால் இரு கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, 20 தடவை தரையில் குதித்தால் போதும். சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.

உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லும் அளவு குழந்தைகளை பழக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக அறிவுரைகள் சொல்லவும். மகளின் பிரச்னை தீர்ந்து, படிப்பில் சிறப்பு பெற வாழ்த்துக்கள்.

- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us