PUBLISHED ON : ஜன 22, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வெற்றிலை - 6
நாட்டு சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய் - 2
தண்ணீர், பெருஞ்சீரகம் - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் தண்ணீரை சூடாக்கி, துண்டுகளாக்கிய வெற்றிலை, பெருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும். வெற்றிலைச்சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும். சுவை மிகுந்த, 'வெற்றிலை தேநீர்!' தயார்!
ஒற்றைத் தலைவலி, அஜீரணம் போன்ற உபாதைகளைப் போக்கும். பசியைத் துாண்டும்.
- எஸ்.எம்.தங்கமீனாள், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 91592 26759
