தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (220)

இளஸ் மனஸ்! (220)

இளஸ் மனஸ்! (220)


PUBLISHED ON : அக் 21, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 19; ரேடியோகிராபியில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கும் மாணவன். குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய் பற்றியும், அவை வரும் விதம் பற்றியும், குணப்படுத்தும் முறை கூறுங்கள் ஆன்டி...

இப்படிக்கு,

என்.செல்வேந்திரன்.



அன்புள்ள மகனே...

இயல்புக்கு மாறாக கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகி ஊடுருவி ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலை கொண்டிருப்பது புற்றுநோய் எனப்படும்.

குழந்தைகளுக்கு, 12 விதமான புற்றுநோய்கள் வருவதாக கணிக்கப்பட்டு உள்ளது. அவற்றில், 100 வகை உள்ளன. பொதுவாக, ஆறு வயது முதல் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாக மருத்துவ நிபுணர்கள் நிரூபித்துள்ளனர்.

சில புற்றுநோய்கள் பற்றி பார்ப்போம்...

* ரத்த புற்றுநோய்

*மூளை தண்டு வட புற்றுநோய்

* நரம்புத்திசு புற்றுநோய்

* நிணநீர்க்குழிய புற்றுநோய்

* தசை செல் புற்றுநோய்

* விழித்திரை கருத்திசு கட்டி

* எலும்பு புற்றுநோய்.

கதிர்வீச்சு வெளிப்பாடு மற்றும் அமில மாற்றம் காரணமாக, குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

டின்னில் அடைக்கப்பட்ட உணவு, ஜீன் மாற்றம் செய்யப்பட்ட உணவு, ரசாயனம் கலந்த எண்ணெய், செயற்கையாக வளர்க்கப்படும் மீன்கள், நகாசு செய்யப்பட்ட சர்க்கரை, ஊறுகாய், உப்பு மிகுந்த உணவு, சிவப்பு மாமிசம் போன்றவற்றை பயன்படுத்துவதால் புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற நோய்கள் வரும் முன் காக்க உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும், தேன் கலந்த இஞ்சி சாறு குழந்தைகள் குடிக்கலாம்.

நோய் ஏற்பட்டால் ரேடியேஷன் தெரபி, கூட்டு மருந்து சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று மற்றும் நோய் எதிர்ப்பை வலுபடுத்தும் சிகிச்சைகளால் குணப்படுத்தலாம்.

இந்த நோயைக் கண்டு பயந்த காலம் மலையேறி விட்டது. முழுமையாக குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் வந்து விட்டன. ஆயுர்வேதம், சித்தாவிலும் கூட, புற்றுநோய்க்கு சிறந்த நிவாரணிகள் உள்ளன.

குழந்தைகள் எவ்வித நோயிலும் சிக்காமல், ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us