தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உழைத்தால் உயர்வு

உழைத்தால் உயர்வு

உழைத்தால் உயர்வு


PUBLISHED ON : ஜூன் 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குருநாதன்கோட்டை என்ற ஊரில், ஹாரிஸ் என்ற வாலிபன் வசித்து வந்தான். பெற்றோரை இழந்து, சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு, வேலை தேடி அலைந்தான்.

ஒருநாள்- -

பசியால் சாலையில் மயங்கி விழுந்தான். அந்த வழியாக வந்த ஜெகன், அவனை எழுப்பி தேற்றி, 'உழைத்துப் பிழைக்க விருப்பமா...' என்று கேட்டார்.

'நிச்சயமாக...'

'எப்படிப்பட்ட வேலை எதிர்பாக்குறே...'

'திருடி, பொய் சொல்லி வாழ விரும்பல; உழைக்க தயாராயிருக்கேன்...'

'இந்த ஊருல எத்தன அலுவலகம் இருக்கும்...'

'எனக்கு தெரிந்து, 50 இருக்கலாம்...'

'அங்க சுமார் எத்தன பேர் வேல செய்வாங்க...'

'தோராயமா, 1,000 பேர்...'

'அதில், 500 பேர், இருசக்கர வாகனங்களில் வருவாங்கன்னு வச்சிக்கோ; வாகனங்களைத் தொடச்சு பராமரிக்கிறவங்க ரொம்ப குறைவு; இத சாதகமாக்கு... அவங்கள சந்திச்சு அனுமதி கேள்; அனுமதிச்சா துடைச்சுக் கொடு... தர்றத வாங்கிக்கோ...'

'உடனே துவங்கிடுறேன் அண்ணா...'

'ரொம்ப மகிழ்ச்சி. முதல்ல, என் வண்டியைத் துடைச்சுக் கொடு பாக்கலாம்...' என்று, ஒரு பழைய துணியைக் கொடுத்தார். 15 நிமிடத்தில், சுத்தமாகத் துடைத்து கொடுத்தான்.

கூலியாக, 10 ரூபாயும், உணவுக்காக, 100 ரூபாயும் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டான்.

மறுநாள் இரவு, ஜெகனை சந்தித்தவன், 'இன்று, ஐந்து அலுவலங்களுக்கு போனேன்; 28 வண்டிகள துடைக்க முடிஞ்சது அண்ணா...' என்றான்.

'எவ்வளவு கிடைத்தது...'

'ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு விதமா கூலி கொடுத்தாங்க; சிலர், 50 ரூபாய்; சிலர், 10 ரூபாய்... மொத்தமா, 530 ரூபாய் கிடைத்தது...' என்றான்.

அவனை கட்டி அணைத்த ஜெகன், 'இந்த உழைப்பையும், நேர்மையையும் முகவரியா ஆக்கிக்கொள்...' என, வாழ்த்தி அனுப்பினார்.

ஒரு வாரத்திற்குப் பின், ஜெகனை சந்தித்த ஹாரிஸ், 'இப்போ தினமும், 30 வண்டிகள் துடைக்கிறேன்... ஒரு நாளைக்கு, 700 ரூபாய் வருமானம் வருது...' என, மகிழ்ச்சி அடைந்தான்.

'அப்படின்னா... மாதம், 21 ஆயிரம் ரூபாய்... நன்றாக திட்டமிடு... சிறப்பாக வாழு...' என, வாழ்த்தினார், ஜெகன். அவன் பெரும் பணக்காரனாக, பின் நாளில் வாழ்ந்தான்.

குட்டீஸ்... கவுரவம் பார்க்காமல் பணியாற்ற தீர்மானித்து விட்டால், சுற்றிலும் ஆயிரம் வேலைகள் உண்டு.

- மா.சாந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us