இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர் மேரி பூனன் லூகோஸ்!
இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர் மேரி பூனன் லூகோஸ்!
PUBLISHED ON : ஆக 01, 2026

கேரள மாநிலம், கோட்டயம், அய்மனம் கிராமத்தில், ஆகஸ்ட் 2, 1886ல் பிறந்தவர், மேரி பூனன் லுாகோஸ். திருவனந்தபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட்டிலும், பல்கலைக்கழக கல்லுாரியிலும் படித்தவர். கேரளாவில் முதல் பெண் பட்டதாரி என்ற புகழ் பெற்றார். மருத்துவப் படிப்பிலும் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் தான்.
கேரளா, தைக்காட்டில், 1917ல் துவக்கப்பட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக நியமனம் பெற்றார். திருவனந்தபுரம், குண்டமான்கடவு பகுதியை சேர்ந்த மேரி என்பவருக்கு, 1920ல், 'சிசேரியன்' அறுவை சிகிச்சை செய்தார். இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்த முதல் பெண் டாக்டர் என்ற புகழையும் பெற்றுள்ளார்.
திருவிதாங்கூர் சட்டசபை உறுப்பினராக, 1922ல் நியமனம் பெற்றார் மேரி. கேரள மாநில சட்டசபையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமை கிடைத்தது. டாக்டர் மேரிக்கு, பத்மஸ்ரீ விருது, 1975ல் வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை வழங்குவதில் வாழ்நாள் முழுதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்தார். அக்டோபர் 2, 1976ல், தன், 90ம் வயதில் மறைந்தார், இந்த சாதனை பெண்.
- நாவம்மா
