PUBLISHED ON : மே 29, 2015

அ நிறம் | அளவு
'நத்தானியேல் ஹாவ்தார்ன்' என்பவர் சுங்க அலுவலகத்தில் அதிகாரியாகப் பணி புரிந்தவர். ஒருசமயம், அவர் அந்தப் பணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். வேலையை விட்டு மிகுந்த மன வேதனையோடு வந்து சேர்ந்த அவரிடம், 'நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அடிக்கடிச் சொல்வீர்களே, ஏதாவது எழுத வேண்டும் என்று; அதை இப்போது தொடங்குங்கள். நீங்கள் வீட்டுச் செலவுகளுக்குக் கொடுத்த பணத்தில் நான் சேமித்து வைத்துள்ளேன். இந்தச் சேமிப்புகள் நமது குடும்பத்துக்குப் போதும்' என்று கூறி அவரை எழுதுமாறு ஊக்க மூட்டினாள் அவரது மனைவி.
நத்தானியேல் மகிழ்ச்சியோடு, தன் கனவான எழுத்துப் பணியைத் தொடங்கினார். புகழ்பெற்ற The Scarlet Letter என்ற புத்தகத்தை எழுதி பெரும் புகழ் பெற்றார்.
