
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 50 கிராம்
பலாப்பழம் - 500 கிராம்
தேங்காய் பால் - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் துாள், முந்திரி, நெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
விதை நீக்கிய பலாப்பழத்தை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து மசிக்கவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி, வேந்த பாசிப்பருப்பு, பலாப்பழம் சேர்த்து கொதிக்க விடவும்.
கெட்டியானதும் தேங்காய் பால், சிறிது உப்பு சேர்த்து கிளறவும். நுரைத்து வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும். சுவைமிக்க, 'பலாப்பழ பருப்பு பாயசம்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி சுவைப்பர்.
- சவுமியா சுப்ரமணியன், சென்னை.