தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜாலி இப்ப வலி தெரியல...

ஜாலி இப்ப வலி தெரியல...

ஜாலி இப்ப வலி தெரியல...


PUBLISHED ON : அக் 31, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு மனிதனின் உடல் வலியைப் பற்றி இன்று வரை விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் அளிக்கப்பட வில்லை. வலி என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அளவில் இருக்கிறது.

நமது உடலிலுள்ள நரம்பு முனைகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இம்முடிச்சுகள் உடலின் உட்பகுதியை விட தோலிலேயே அதிக அளவில் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன. எனவே, தோலின் மீது ஓரிடத்தில் காயம் பட்டால் அந்த இடத்தில் நாம் உடனே வலியை உணர முடியும். ஆனால், உடலின் உட்பகுதியில் காயமோ, நோயோ இருந்தால், அந்த இடத்திலேயே நாம் வலியை உணர்வோம் என்று நிச்சய மாகக் கூற முடியாது. உதாரணமாக, பல்லில் நோய் தோன்றினால் அவ்விடத்தை விட்டு தாடை பகுதியில் நாம் வலியை உணரலாம்.

வலி என்பது நம்மை எச்சரிக்கை செய்வதற்கான உணர்வாகவே கருதப் படுகிறது. ஓரிடத்தில் நோயின் தாக்குதலோ அல்லது காயமோ ஏற்பட்டால் அவ்விடத்திலுள்ள நரம்பு முடிச்சுகள், வலியை மூளைக்கு உணர்த்துகிறது. அதன் காரணமாக, அந்த இடத்திலுள்ள காயத்தை உணர்ந்து நாம் சிகிச்சை செய்து கொள்கிறோம்.

முதுகுத்தண்டு மற்றும் மூளையின் இணைப் பிலேயே ஒருவர் வலியை உணர முடியும். இந்தத் தொடர்பு நிறுத்தப்படும் போது ஒருவரால் வலியை உணர முடியாது. கோமா நிலையிலுள்ள மனிதர்கள் வலியை உணர்வதில்லை. அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மயக்க மருந்துகள் மூளை மற்றும் முதுகுத்தண்டின் தொடர்பைத் துண்டித்து விடுவதால் அவருக்கு வலி தோன்றுவதில்லை.

உடலின் குறிப்பிட்ட இடத்தை மரத்துப் போகச் செய்வதற்கான மருந்துகள் (பல் சிகிச்சை) அவ்விடத்தின் நரம்பு முடிச்சுகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்வதால் அவ்விடத்தின் வலியை நாம் உணர்வதில்லை.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us