
தஞ்சை மாவட்டம், அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அறிவியல் வகுப்பு நடந்து கொண்டிந்தபோது, கடைசி பெஞ்சில் ஒரு மாணவன் நன்றாக தூங்கி கொண்டிருந்தான். இதை கவனித்த ஆசிரியர், பாடத்தை நிறுத்திவிட்டு, மெதுவாக அவன் அருகில் சென்று குச்சியால் தட்டி அவனை எழுப்பினார்.
அவன் எழுந்து, அரண்டு போய், 'திருதிரு'வென விழித்தான்.
'ஒன்றும் கவலைப்படாதே தூக்கம் கெட்டுப்போச்சேன்னு... நான் இப்ப நடத்துன பாடத்துல இருந்து, ஒரே ஒரு கேள்வி மட்டும் உன்னை கேட்கிறேன். அதற்கு மட்டும் நீ சரியா பதில் சொல்லிட்டா, நீ தொடர்ந்து தூங்கலாம்' என்று சொல்லி கேள்வி கேட்டார் ஆசிரியர்.
எதிர்பாராத விதமாக அந்த பையன் பதிலை சரியாக சொல்ல, ஆசிரியர் அசந்து போய், 'தூக்கத்துலேயும் ரொம்ப உஷாராதான் இருக்கான் பயபுள்ள; நீ தொடர்ந்து தூங்குப்பா!' என்று சொல்ல, வகுப்பறையே சிரிப்பலையில் அதிர்ந்தது.
-ஆர்.பாரதி மகேஷ், குரோம்பேட்டை.