PUBLISHED ON : அக் 23, 2021

தேவையான பொருட்கள்:
இளநீர் - 1 கப்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 1
மிளகு, சீரகம் - தலா 1 தேக்கரண்டி
துாதுவளை இலை, துளசி இலை, கற்பூரவள்ளி இலை, கண்டந்திப்பிலி, வெற்றிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, புளிக்கரைசல், கடுகு, நெய், உப்பு, ரசப்பொடி, மஞ்சள் பொடி - தேவையான அளவு.
செய்முறை:
துாதுவளை, துளசி, கற்பூரவள்ளி, கண்டந்திப்பிலி மற்றும் வெற்றிலையை சுத்தம் செய்து, மிளகு, சீரகம் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தில், புளிக்கரைசல் ஊற்றி, அரைத்த இலை விழுது, தக்காளி, மஞ்சள் பொடி, ரசப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன், ஒரு கப் இளநீர் ஊற்றி, நுரை வந்ததும் நெய்யில் தாளித்த கடுகு, சீரகத்தை கொட்டவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை துாவி அடுப்பை அணைக்கவும்.
ஆரோக்கியமான, 'இளநீர் ஹெர்பல் ரசம்!' தயார். அனைத்து வயதினரும் பருகலாம். சளி, இருமல், காய்ச்சல் அண்டாது.
- நளினி ராமச்சந்திரன், கோவை.
