PUBLISHED ON : ஜூலை 03, 2015

ஜப்பானில் பாடியும், ஆடியும் நடித்துக் காட்டும் நாடகங்களுக்கு, 'கபுகி' எனப்பெயர். அநேக நாடகங்கள் வியக்கத்தக்க சம்பவங்களின் கோர்வையாக இருக்கும். சில மந்திர தந்திரக் காட்சிகள் நிறைந்தவைகளாக இருக்கும். நடிகர்கள் நீளமாக அங்கிகள் அணிந்து முகத்தில் வண்ணங்கள் பூசிக் கொண்டு நடித்தனர். கதாநாயகன், கதாநாயகியாக ஆண்களே நடிப்பர். கதாநாயகன் முகம் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருக்கும். வில்லனின் முகம் சிவப்பு வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அடிக்கடி சண்டைக் காட்சிகளும், மாயமான செய்கைகளும் நிறைந்திருக்கும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் மாயமான கப் வரும். அதிலிருந்து டீ குடிக்கும் சம்பவம் போல கதையும், பாடல்களும் இடம் பெற்றிருக்கும். பொதுவாக மக்கள் ரசிக்கும் படியாக எல்லா அம்சங்களும் நிறைந்ததாக இந்த, 'கபுகி' நாடகங்கள் இருக்கும்.
