PUBLISHED ON : செப் 30, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கருப்பட்டி பொடி - 2 கப்
கெட்டி அவல் - 1 கப் (பாலில் ஊறியது)
நெய், தண்ணீர், ஏலக்காய் பொடி - தேவையான அளவு
முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - சிறிதளவு.
செய்முறை:
தண்ணீருடன், கருப்பட்டியை சேர்த்து பாகாக காய்ச்சவும். அதில், அவலை போட்டு, நெய் ஊற்றி கிளறவும். நன்கு சுருண்டு வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்கு கிளறவும். சுவையான, 'கருப்பட்டி அவல் கேசரி!' தயார்.
சத்துக்கள் நிறைந்தது. எல்லா வயதினரும் விரும்பி உண்பர்.
- ஆர்.அபிராமி, திருச்சி.
தொடர்புக்கு: 94438 58482
