PUBLISHED ON : ஜூலை 11, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 200 கிராம்
கருப்பட்டி - 100 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்துாள், எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பு, பச்சரிசி, உளுத்தம் பருப்பை, தண்ணீரில் ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். பொடித்த கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும்.
அதனுடன் அரைத்த மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்துாள் சேர்த்து கலக்கவும்.
பணியாரக்கல்லை சூடாக்கி, குழிகளில் எண்ணெய் விட்டு, மாவு கலவையை ஊற்றி, இருபுறமும் வேக வைக்கவும். சுவையான, 'கருப்பட்டி பணியாரம்' தயார். சிறுவர்,சிறுமியர் விரும்பி உண்பர்.
- க.அமீருன்னிஸ்சா, கடலுார்
