தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சுக்கில் இருக்கு சூட்சுமம்!

சுக்கில் இருக்கு சூட்சுமம்!

சுக்கில் இருக்கு சூட்சுமம்!


PUBLISHED ON : ஆக 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில், சுக்கு முதலிடம் பெறுகிறது.

'சுக்கிலிருக்கிறது சூட்சுமம்' என்ற பழமொழி, இதன் மருத்துவ முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில் சுவை ஊட்டுகிறது. கருப்பட்டி இட்டு, சுக்கு நீர் தயாரிப்பது, தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது.

இஞ்சியை பக்குவம் செய்வதால் கிடைப்பதே சுக்கு. அறுவடை செய்த இஞ்சியை, ஒரு நாள் முழுவதும், நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சியால், மேல்தோலை நீக்கி, சூரிய ஒளியில், நன்கு காய வைத்தால், சுக்கு கிடைக்கும்.

தரத்தை பொறுத்து, 100 கிலோ இஞ்சியிலிருந்து, 25 கிலோ வரை

சுக்கு கிடைக்கும். சேமித்து வைத்தால், ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம்.

சுக்கு, பித்தம் அகற்றும்; வாயுதொல்லையை வேரறுக்கும்; அஜீரணத்தை போக்கும். வலியை அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும்; மூட்டு வலியை மொத்தமாய் ஓட்டும்; வாதத்தை அகற்றும்.

மருத்துவ பயன்!

* சுக்குடன், பால் சேர்த்து, மையாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூட்டு பதத்தில், கை, கால் மூட்டுகளில் பூசி வர, மூட்டு வலி குணமாகும்

* சுக்கை, துாள் செய்து, எலுமிச்சை சாறுடன் குடித்தால், பித்தம் விலகும்

* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தையை சேர்த்து, கஷாயம் செய்து பருகி வர, கடுஞ்சளி குணமாகும்

* சுக்குடன், வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்

* சுக்குடன், நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால், தலைவலி போயே போச்சு.

- பாலாஜி கணேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us