
குளிர்காலத்தில் நம் மூச்சு ஏன் புகைபோல வெளியேறுகிறது?
பொதுவாக, நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் நிரம்பியுள்ளன. நாம் வெளியிடும் மூச்சுக்காற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. வெளிப்புற வெப்பநிலையோ மூச்சுக் காற்றை விட சற்று குறைவாகவே அமைந் திருக்கும். அவ்வெப்பநிலையில் நமது மூச்சுக்காற்று வெளிக்காற்றோடு கலந்துவிடும். எனவே, அது நமது கண்ணுக்குப் புலப்படாது.
ஆனால், குளிர்காலத்தில், குளிர்ந்த பிரதேசங்களிலோ வெளிக்காற்றின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். அவ்வேளைகளில் நமது மூச்சுக் காற்று வெளியேறியவுடன், தனது வெப்பநிலையில் 10 டிகிரி சென்டி கிரேட் குறையும். எனவே, அதிலுள்ள நீராவியும் கார்பன்-டை-ஆக்ஸைடும் மிகச்சிறிய நீர்த்திவலைகளாக மாறி விடும். அவை வெளிக்காற்றில் உடனடியாகக் கலக்காமல் மிதந்து செல்லும். அந்நீர்த்திவலைகளே நமது கண்களுக்கு புகைபோலத் தோன்றுகிறது.