PUBLISHED ON : ஜூலை 17, 2015

அ நிறம் | அளவு
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதனின் கலாச்சார சின்னமாக, பண மதிப்பாக மதச் சின்னமாகப் பயன்படுத்தி வரும், 'மெட்டல்' தங்கமாகும். இது மிகக் கடினத்தன்மையுள்ள ஒரே மெட்டல். நினைத்த வடிவங்களில் இயைந்து வரக் கூடியதாகும். தங்க நகைத் தயாரிப்பில், இணைப்புகளில் சேதாரமாகலாம். இதனால் எடையும், மதிப்பும் குறையலாம். இதனைத் தவிர்க்க KDM என்ற காட்மியம் பயன்படுகிறது. காட்மியம் பற்ற வைத்தபின் ஆவியாகி மறைந்து முழுத்தங்கமாகவே இணைப்பு தெரியாமல் காட்சியளிக்கும். முழு எடையும் அப்படியே கிடைக்கும். தங்கம் ராஜ உலோகமென்றாலும் நைட்ரிக் + ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் கரைந்துவிடும். செல்போன்களில் கூட தங்கம் பயன்படுத்தப் படுகிறது.
