
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் - 1
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
நெய், மஞ்சள் துாள், மிளகு துாள், பெருங்காயம், இஞ்சி - சிறிதளவு
உப்பு, கடுகு, கொத்தமல்லி தழை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் துாள், உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். அதில், நன்கு வேக வைத்து மசித்த துவரம் பருப்பு, அரைத்த தக்காளியை சேர்க்கவும்.
இந்த கலவை கொதித்ததும் மிளகு துாள், நறுக்கிய கொத்தமல்லி தழை போட்டு, எலுமிச்சை பழத்தை பிழியவும். நெய்யில், கடுகு தாளித்து கொட்டவும். சுவை மிக்க, 'எலுமிச்சை பழ ரசம்!' தயார். ஜீரண சக்தியை அதிகரிக்கும்; சூப்பாகவும் பருகலாம்.
- எஸ்.லட்சுமி சுப்ரமணியன், காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 91766 71149

