PUBLISHED ON : நவ 27, 2021

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய் பொடி, நெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை நன்கு வறுத்து, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின், வடிகட்டி நைசாக அரைக்கவும். அரைத்த மாவை, இட்லி தட்டில், ஆவியில் வேக வைத்து, ஆறிய பின் உதிர்க்கவும்.
இதனுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்பொடி, நெய், பொடியாக்கிய வெல்லம் கலக்கவும். சுவையான, 'பாசிபருப்பு புட்டு!' தயார். வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும்.
- கே.பார்வதி, சென்னை.
தொடர்புக்கு: 98416 50264
