
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுத்தை வால் பல்லி- பெயரைக் கேட்டாலே கிலியாக இருக்கிறது அல்லவா? இதன் வாலில் இருக்கும் புள்ளிகள் சிறுத்தையின் உடலில் இருப்பதைப் போன்று உள்ளதால் இந்தப் பெயர் வந்தது. ஆபத்து வந்து விட்டால் இரண்டே நிமிடத்தில் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் செய்யும். இந்தப் பல்லியிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரலைக் கடித்தால், துண்டித்து எடுத்து விடும். ஏறக்குறைய 8.5 அங்குல நீளம் வளரும். சிறுத்தை வால் பல்லி அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் வெட்டவெளியிலும், பாலைவனப் பகுதியிலும் காணப்படுகிறது.