sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கல்வி சாலைகள் செய்வோம்!

கல்வி சாலைகள் செய்வோம்!

கல்வி சாலைகள் செய்வோம்!


PUBLISHED ON : செப் 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் படித்த பள்ளி பெரும் மகிழ்ச்சி தரும். மகாத்மா காந்தி படித்த பள்ளி பற்றிய விபரங்களை பார்ப்போம்...

குஜராத் மாநிலம், போர்பந்தரில் பிறந்தார் காந்தி. பின், குடும்பத்தாருடன் ராஜ்காட் நகருக்கு குடி பெயர்ந்தார்; அங்குள்ள பள்ளியில், 1880 முதல், 1887 வரை படித்து மெட்ரிகுலேஷன் வகுப்பு தேர்ச்சி பெற்றார். இந்த பள்ளி ஆரம்பத்தில், ராஜ்காட் பள்ளி என அழைக்கப்பட்டது. சவுராஷ்டிரா பகுதியில் துவக்கப்பட்ட முதல் ஆங்கில பயிற்று மொழி பள்ளி இது தான்.

இந்த பள்ளி...

* ஐரோப்பிய நாடான பிரிட்டன், டீயூடர் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டது. வெளியே, மூலையில் பிரம்மாண்ட சக்கராவை காணலாம்

* இது, தி ஆல்பிரெட் உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில், 1853ல் தரம் உயர்த்தப்பட்டது

* சுதந்திரமடைந்த பின், மோகன்தாஸ் காந்தி என்ற பெயரைப் பெற்றது

* இந்த பள்ளியை, 2017ல் அருங்காட்சியமாக மாற்றியது குஜராத் அரசு. இதை, செப்., 30, 2018ல் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

* பள்ளியின் இரண்டு மாடியிலும் இருந்த வகுப்பறைகள், 39 கேலரிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள, 18 கேலரிகளில் காந்தியின் பிறப்பு, பள்ளி படிப்பு, சுதந்திர போராட்ட கால வரலாற்றுப் புகைப்படங்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

* காந்தியின் எண்ணம், கொள்கைகளை பிரதிபலிக்கும் காலரிகள், இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தியம், நேர்மை, உணர்வுகளை கட்டுப்படுத்தல் மற்றும் அகிம்சை பற்றி இவற்றில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது

* காந்தி ஜெயந்தியும், சர்வோதய தினமும் தவறாமல் கொண்டாடப்படுகின்றன

* காந்தியின் அழகிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது

* குழந்தைகளின், ஆர்வத்தை துாண்டும் வகையில், காந்தியின் வாழ்க்கை சித்திரம், ஒலி, ஒளி காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது

* காந்தி அமர்ந்து படித்த வகுப்பறைகள், சிறப்பாக பேணப்படுகின்றன.

குஜராத் மாநிலம், ராஜ்காட் நகராட்சி நிர்வாகமும், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து அருங்காட்சியகத்தைப் பராமரிக்கின்றன.

- ராஜிராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us