/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
மேஜிக் செய்யலாம் - வண்ண வண்ண விளையாட்டு!
/
மேஜிக் செய்யலாம் - வண்ண வண்ண விளையாட்டு!
PUBLISHED ON : ஆக 12, 2016

தேவையான பொருட்கள்: வட்டமான அட்டை, போஸ்டர் வண்ணம், பிரஷ், குத்தூசி மற்றும் நூல்.
செய்முறை: வட்டமாக வெட்டி வைத்திருக்கும் அட்டையில் ஒரு பாதி சிவப்பு வண்ணமும், மறு பாதி நீல வண்ணமும் பூசவும். அவை நன்கு காய்ந்ததும் வட்டத்தின் ஒரு ஓரத்தில் இரண்டு துளைகளையும், எதிர்புறத்தில் இரண்டு துளைகளையும் குத்துாசியால் உண்டாக்கி, அவற்றில் நூலை நுழைத்து வைக்கவும். இப்போது இரண்டு கைகளிலும் இரண்டு பக்க நூலை ஒரு சேரப் பிடித்துக் கொண்டு நூல் நன்கு முறுக்குமாறு சுற்றி இழுக்கவும்.
இப்போது நடுவில் உள்ள இரு வண்ணம் பூசப்பட்ட அட்டை நன்கு சுழலும். என்ன ஆச்சரியம் நீலம் மற்றும் சிவப்பு பக்க அட்டை சுழலும் போது இந்த இரண்டு வண்ணமும் தோன்றாமல் புதிதாக ஊதா வண்ணம் தோன்றி பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். இது எப்படி என்றால் நம் கண்கள் இரு வண்ணங்களையும் அதிக சுழற்சியில் கலந்து காண்கிறது. இதுபோல வெவ்வேறு வண்ண அட்டையில் என்ன வரும் என்று சோதித்து தெரிந்து கொண்டு பார்வையாளர் மத்தியில் செய்து காட்டி அசத்தலாம்.