தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொய்யின் தத்துவம்!

பொய்யின் தத்துவம்!

பொய்யின் தத்துவம்!


PUBLISHED ON : ஜன 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம், சுவாட்ஸ் உயர்நிலைப் பள்ளியில், 1945ல், 8ம் வகுப்பு படித்த போது, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமும் அங்கு படித்தார். எனக்கு, ஜூனியராக இருந்தார். ஆங்கில ஆசிரியர் கிருபாலனி மிகவும் கண்டிப்பானவர்; சட்டையில் பட்டன், ஒழுங்காய் மாட்டாததைக் கூட கவனித்து கண்டிப்பார்!

முதல் வகுப்பில் ஆங்கிலம் பாடம் நடக்கும். வகுப்புக்கு வந்தவுடன் குளிக்காதவர்கள் பற்றி விசாரிப்பார். சிலர் உரிய காரணம் கூறி தப்பி விடுவர். குளித்ததாக பொய் சொன்னால் பிடரியில் கையால் தொட்டு சோதிப்பார்; ஈரம் இல்லா விட்டால் உள்ளங்கையில் பிரம்பால் பின்னி எடுத்து விடுவார்.

ஒரு நாள், நான் குளிக்கவில்லை. தலையிலும், பிடரியிலும் லேசாக தண்ணீர் தெளித்து ஈரம் ஏற்படுத்தியபடி சென்றேன். வழக்கம் போல், 'குளிக்காதவன் எல்லாம் எழுந்து நில்...' என்றார். நான் எழவில்லை. என்னை அழைத்து, பிடரியில் தொட்டு பார்த்தார்.

ஈரம் இருந்ததால், 'குளித்தாயா...' என, இரண்டு மூன்று முறை சந்தேகத்துடன் கேட்டவர், திடீரென என் அரைஞாண் கயிறைப் பிடித்துவிட்டார். அதில், ஈரம் இல்லை. கோபத்துடன் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். தாங்க முடியாமல் வாய் விட்டு கதறி அழுதேன்; மாணவர்கள் சிரித்து கேலி செய்தனர்.

'பொய்யும், பொய்யரும் உண்மைக்கு முன் நிலைத்து நிற்க முடியாது' என்ற உண்மையை உணர்ந்து, அன்றே பொய் சொல்வதை விட்டேன். எனக்கு, 96 வயதாகிறது; பொய்யின் தத்துவத்தை கண்டிப்பு மூலம் உணர்த்திய அந்த ஆசிரியருக்கு வீர வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்!

- சி.உலகசுந்தரம், சென்னை.

தொடர்புக்கு: 96772 75493


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us