PUBLISHED ON : செப் 24, 2022

உலகின் மிக நீளமான கடற்கரையை, வட அமெரிக்க நாடான கனடா கொண்டுள்ளது. இதன் நீளம், 2 லட்சத்து, 2,080 கிலோ மீட்டர். ஒரு மனிதன், ஐந்து ஆண்டுகள் நடந்தால் தான் கனடா நாட்டு கடற்கரையை கடக்க முடியும். உலகில் உள்ள வனப்பகுதியில், 10 சதவீதம் கனடாவில் தான் உள்ளது!
ஆசிய நாடான இந்தோனேஷியா கடற்கரையின் நீளம், 99 ஆயிரத்து 83 கி.மீ., இங்குள்ள, 'தாங்க்சி' கடற்கரை உலகிலேயே அழகானது என்ற புகழைப் பெற்றுள்ளது. இதற்கு, 'பிங் பீச்' என்ற சிறப்புப்பெயரும் உண்டு. ஐரோப்பிய நாடான நார்வேயின் கடற்கரை நீளம், 58 ஆயிரத்து, 133 கி.மீ., உலகிலேயே அதிக அளவில், சால்மான் மீன்கள் இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நாடான ரஷ்யாவின் கடற்கரை நீளம், 37 ஆயிரத்து 653 கிலோ மீட்டர். உலகின் மிக பெரிய நன்னீர் ஏரியான, பைக்கல் இந்த கடற்கரையில் தான் உள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பான் கடற்கரையின் நீளம், 29 ஆயிரத்து 751 கிலோ மீட்டர். உலகிலே அதிக அளவில் கடல் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தான் உள்ளது. இதன் பெயர் சுகிஜி மீன் மார்க்கெட்.
- அபிஷேக்
