தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்கையை தேடி! (8)

தங்கையை தேடி! (8)

தங்கையை தேடி! (8)


PUBLISHED ON : ஜூலை 25, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்து பேரும் விரைவிலேயே வினோதினி பெண் உள்ள கிராமத்தை அடைந்தனர். அன்று பகல் அங்கு தங்கி இரவு வந்ததும், அந்தப் பெண் குறிப்பிட்ட ஏரிக் கரையை அடைந்தனர். பூமியினடியில் செல்லும் கால்வாயின் நுழைவாசலின் மீதிருந்த பாறாங்கல்லினால் ஆன மூடியை மிகுந்த சிரமத்தோடு நகர்த்தினர். அந்த அடிமைப் பெண் அங்கேயே காவலிருப்பதாகக் கூறினாள்.

அவளோடு ஒரு வீரனையும், குதிரை களையும் விட்டுவிட்டு, குலாமும், அவன் இரு வீரர்களும், மகேஷும் பாதாளக் கால்வாயி னுள் இறங்கினர். அதற்கு முன் அந்தப் பெண் அவர்களுக்கு கடைசி நிமிஷக் குறிப்பு களை கொடுத்தாள்.

''நீரூற்றை அடைந்ததும் நீங்கள் கோட்டையின் முற்றத்திலிருப்பீர்கள், அதன் வலப்பக்கமும், இடப்பக்கமும் இரண்டு உயரமான மினார்கள் இருக்கும். வலது பக்கத்து மினார் வழியாய் போனால் ஆறாவது அறையில் தான் உங்கள் சகோதரியும், அம்பிகாவும் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த அறையை இரண்டு பலசாலிகளான ஆப்பிரிக்க அடிமைகள் காவல் காக்கின்றனர். ஆகவே, திறமையாகச் செயல்பட வேண்டும்,'' என்றாள்.

மகேஷ், குலாம் முகமது, இருவீரர்கள் என எல்லோருமே ஆயுதம் தாங்கி, பாதாளக் கால் வாயில் இறங்கி நடக்க லாயினர். கால்வாயில் இடுப்பளவு நீரே இருந்தது. அரை மணி நேரத்தில் கோட்டைக் குள்ளிருக்கும் நீரூற்றுக்கு வந்து விட்டனர். நான்கு வலுவான ஆண்களின் பலத்திற்குமுன் கால்வாயின் மேல் மூடி உறுதியாக இருந்தாலும், தாக்குப்பிடிக்க முடியவில்லை. தக்க ஆயுதங்கள் இருந்ததினால் சுவரில் ஒரு ஆள் நுழைவதற்கான துவாரம் உண்டாக்கி விட்டனர். குலாம் முகமதுதான் முதலில் வெளியேறினான். பாதாளக் கால்வாய்க்குள்ளி லிருந்து மற்றவர்களுக்கும் கை கொடுத்துத் தூக்கிவிட்டான். எல்லோரும் கோட்டையின் முற்றத்தில் வந்து நின்றதும் சுற்றும், முற்றும் நோட்டமிட்டனர். அடிமைப் பெண் கூறியபடி, வலதுப் பக்கத்து மினார் வழியாகப் போனால் ஆறாவது அறை என்று குறிப்பிட்டது உள்ளே நுழைந்த பிறகா அல்லது வெளியிலிருந்த படியா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

''இப்படி யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது. என் வாள் எந்தக் கதவையும் திறக்கும் வல்லமை பெற்றது... வாருங்கள்,'' என்று கூறி வலப்புற மினாரை நோக்கி முன்னேறினான் குலாம் முகமது.

ஆறாவது அறையின் கதவை நெட்டித் திறந்து உள்ளே போனபோது அங்கு ஆறு ஆப்பிரிக்க அடிமைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்களை எப்போதுமே எழுந்திருக்காதபடி செய்துகொண்டிருக்கும் போது, மூலையில் ஒரு உருவம் உதவி கேட்டுச் கூச்சலிடலாயிற்று. அது பழக்கப்பட்ட குரலாக இருக்கவே, சட்டென்று அதன்மீது பாய்ந்தான் குலாம். அது அந்தக் கழுகுக் கண் கிழவன்.

உடனே இவன் இடைக்கச்சையை உருவி, அவன் வாயைக் கட்டி, அவன் இரு கை களையும் முறுக்கிப் பின்னால் கொண்டுபோய்க் கட்டி அவனை ஊமையாக்கினான்.

இதற்குள் அந்த அடிமைகளின் குரல்வளை யில் கத்தியை அழுத்தி, அவர்களிடமிருந்தே தன் தங்கை, அம்பிகாவின் புதிய பெயர்களைக் கூறி அவர்கள் இருக்குமிடத்தைத் தெரிந்துக் கொண்டனர் மகேஷûம், வீரர்களும்.

எல்லோரும் அங்கு விரைந்தனர். சத்தம் கேட்டு வினோதினியும், அம்பிகாவும் எழுந் தனர். உள்ளே நுழைந்த தன் சகோதரனைக் கண்ட வினோதினி தாவி வந்து பாய்ந்து கட்டிக்கொண்டாள். அவன் முதுகில் ஒண்டிக் கொண்டாள் அம்பிகா. குலாம் முகமது அவர்களை துரிதப்படுத்தினான்.

அவர்கள் உடனே கிளம்பத் தயாராயினர். குலாமின் வீரர்கள் அங்கிருந்த செல்வங்களை வாரிச் சுருட்டிக் கொண்டனர். எல்லோரும் வந்த வழியிலேயே திரும்பலாயினர். அப்போது குலாம் அவர்களைப் போக சொல்லிவிட்டுத் தாமதித்தான். கட்டிப் போட்டிருந்த கிழட்டுக் கோட்டானை கோட்டை முற்றத்துக்கு இழுத்து வந்தான். அங்கிருந்த உயர்ந்த கொடிமரத்தின் உறுதியான கயிற்றில் சுருக்கு போட்டு அந்தப் பொல்லாத கிழவன் கழுத்தில் அந்தச் சுருக்கை மாட்டி கயிற்றை மேலே இழுத்தான். உனக்கு இதுதான் சரியான தண்டனை என்று கூறிவிட்டு பாதாளக் கால்வாயில் இறங்கி முன்னால் போய்க் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்துக் கொண்டான்.

ஓடைக்கரையை அடைந்தவர்களை ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை குலாம் முகமது.

''சுல்தானுக்கு இந்நேரம் விஷயம் தெரிந் திருக்கும். தன் வீரர்களை நாலாதிசைகளிலும் அனுப்புவார். ஆகவே, நாம் விநாடியும் தாமதிக்கக் கூடாது,'' என்று குதிரைகளை விரட்டினான்.

தங்களுக்கு உதவிய அடிமைப் பெண்ணிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

''எனக்கு விடுதலை கிடைக்கச் செய்த உங்களுக்கல்லவா நான் நன்றி தெரிவிக்க வேண்டும். இனி என் ஊருக்கு நான் போய்க் கொள்வேன். நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து கிளம்புங்கள்,'' என்றாள் அந்த வினோதினி.

குலாம் முகமதுவும், அவன் வீரர்களும் விடைபெற வேண்டிய இடம் வந்தது. மகேஷுக்கு பேசவே வார்த்தைகள் இல்லை. கொள்ளைக்காரர்களில் இவ்வளவு நல்ல மனம் படைத்த குலாமைத் தழுவிக் கொண்டான். வினோதினியும், அம்பிகாவும் கண்ணீர் மல்க குலாமிடம் விடைப் பெற்றனர்.

தன் மகளோடு திரும்பிய மகனைக் கண்டு நாராயண நம்பூதிரி பரவசப்பட்டுப்போனார். மறுவாழ்வு பெற்ற தன் மகள், மகனின் வரவிற்காக பெரிய விழாவே நடத்தினார். அதில், அம்பிகாவை தன் மகனுக்கு மணமுடித்து வைக்கப்போவதாக அறிவித்தார். நாராயண நம்பூதிரியின் நல்ல மனதை எல்லோரும் பாராட்டினர்.

ஒரு நல்ல நாளில், மகேஷுக்கும், அம்பிகாவிற்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. அவர்கள் சீறும் சிறப்புமாக வாழ்ந்தனர்.

சுபம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us