PUBLISHED ON : ஜூலை 06, 2018

அ நிறம் | அளவு
தேவையானப் பொருட்கள்:
பொடித்த ரஸ்க் துாள் - 1 கப்
மாம்பழ விழுது - 1 கப்
சுண்டக் காய்ச்சிய, சூடான பால் - 1 கப்
நெய் - சிறிதளவு,
சர்க்கரை - ஒன்றரை கப்
முந்திரி, திராட்சை - 10
ஏலக்காய் துாள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில், நெய் விட்டு, முந்திரி, திரட்சையை வறுத்து எடுக்கவும். பின், மீதி நெயில், ரஸ்க் துாளைக் கொட்டி, பொன்னிறமாக வறுக்கவும். அதில், மாம்பழ விழுது, பால் சேர்த்து கிளறி, கெட்டியனாதும், சர்க்கரை சேர்க்கவும். அல்வா பதம் வந்ததும், ஏலக்காய் துாள், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். இந்த அல்வா சுவையானது; சத்தானதும் கூட.
- ஆர்.கிரிபா, மும்பை.
