PUBLISHED ON : அக் 18, 2019

அ நிறம் | அளவு
தீபாவளியின் போது, வண்ண வண்ணமாக மத்தாப்பூ கொளுத்துகிறோம். மத்தாப்பில் வரும் நிறங்களுக்கு, என்ன காரணம் என்று பார்ப்போமா...
மஞ்சள் நிறமாக மத்தாப்பூ ஒளிர்ந்தால், அதில் சோடியம் உப்பு அதிகம் உள்ளது; பச்சை நிறத்தில் ஒளிர்ந்தால், பேரியம் உப்பு அதிகம்; சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தால், ஸ்டிரான்ஷியம் உப்பு அதிகம் என்று பொருள்.
