தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உருளைக்கிழங்கு மருத்துவ பலன்கள்!

உருளைக்கிழங்கு மருத்துவ பலன்கள்!

உருளைக்கிழங்கு மருத்துவ பலன்கள்!


PUBLISHED ON : நவ 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு. உடலில் அமில அளவு கூடினால் ஏற்படும் நச்சுத்தன்மையைத் தடுக்கும். நாள்பட்ட மலச்சிக்கல், குடலில் தேங்கும் நச்சு, நீர்க்கோப்பு போன்றவற்றை தீர்க்கும்.

சத்து குறைவால் வரும், சொறி, கரப்பான் போன்ற நோய்களையும் சரிப்படுத்தும். தாய்ப்பால் நன்கு சுரக்க, உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.

சாப்பாட்டுக்கு முன், இரண்டு தேக்கரண்டி உருளைக்கிழங்கு சாறு குடித்து வந்தால், வாயு பிடிப்பு நீங்கும். வயிறு மற்றும் குடல் உபாதைகள் மறையும்; இரைப்பை ஜவ்வு அலர்ஜியும் சரியாகும்.

உருளைக்கிழங்கு தோலை நன்றாக கழுவி, நீருடன் கொதிக்க வைத்து, வடிக்கட்டி, தினமும், மூன்று வேளை குடித்து வந்தால், வாயுப் பிடிப்பு நீங்கும்.

பச்சை உருளைக்கிழங்கை வெட்டி, உடலில் தேய்த்தால், தோல் சுருக்கம், முதுமை குறைபாடுகள் மறையும். 40 வயதை கடந்தவர்கள், உருளைக்கிழங்கு உணவுகளை குறைத்துக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us