PUBLISHED ON : மார் 28, 2014

அ நிறம் | அளவு
செடியின் இலைகள் பல்வேறு வகைப்பட்ட உயிரணுக்களால் ஆனவை. ஒவ்வொரு உயிரணுவும் சில திரவப் பொருட்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்திரவத்தின் அழுத்தம் காரணமாக உயிரணுக்களும், அவற்றாலான இலையும் உறுதியாக நிமிர்ந்திருக்க முடிகிறது.
இலையின் உயிரணுவில் இருந்து திரவம் வெளியேறி விட்டால், திரவ அழுத்தம் நீங்கி இலையின் உறுதித் தன்மை தளர்ந்து விடும். மிமோசா புடிகா என்பது தொட்டாற் சிணுங்கியின் தாவரவியல் பெயர்.
இச்செடியின் இலையைத் தொடும் போது, அதன் கீழ்ப்பகுதி உயிரணுக்களில் உள்ள திரவத் தன்மை நீங்கி விடுகிறது. ஆனால், மேற்பகுதி அணுக்களில் திரவத் தன்மை நீங்குவது இல்லை. மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கி விடுகிறது.
