தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மொக்க ஜோக்ஸ்!

மொக்க ஜோக்ஸ்!

மொக்க ஜோக்ஸ்!


PUBLISHED ON : ஜூலை 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''வெங்காயம் விக்கிறவரை பாத்து, தலைவர் பொறாமைப்படுறாரே?''

''அவருக்கு அதிகம் கூட்டம் சேருதாம்!''

- லெ.நா.சிவகுமார், சென்னை.

''எங்கே, 'டிராபிக் ஜாம்' ஆகுதோ, அங்கே தலைவர் பேச ஆரம்பிச்சுடுவார்...''

''ஏன்?''

''கூட்டத்தை கலைக்கத்தான்!''

- எஸ்.தஜ்மீல் அஹமது, தஞ்சாவூர்.

''மன்னா... சமையல்காரர் இருக்கும் போதே சமைக்க சொல்கிறீரே... ஏன்?''

''அரண்மனை வைத்தியர், உப்பு சப்பில்லாம சாப்பிட சொல்லியிருக்கார் மகாராணி!''

- கீதா, திருவனந்தபுரம்.

''ராப்பிச்சை, இன்று நம்ம வீட்டுக்கு வரமாட்டான்னு எப்படி சொல்றீங்க?''

''வாசல்ல, மனைவி சமையல்ன்னு பலகை வெச்சுருக்கேன்!''

- எம்.கல்லுாரிராமன், ராமநாதபுரம்.

''இனிமே, கபாலி நம்ம ஏரியாவுல திருட மாட்டான்...''

''எப்படி சொல்றீங்க?''

''அவனுக்கு, மாலைக்கண் நோய் வந்துருச்சாம்!''

- த.நேரு, கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us