
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துறவி நண்டு என்பது, பத்துக்காலி வகையை சேர்ந்த மெல்லுடலி. உலகம் முழுதும், 1,100 வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டை சுமந்தபடி தனியாக வாழ்வதால், துறவி நண்டு என பெயர் பெற்றது.
இவை, வளர வளர கூட்டை மாற்றி கொள்ளும். பெரிய நண்டு கழற்றி போட்ட கூட்டை, சிறிய நண்டுகள் வரிசையாக மாற்றி மாற்றி அணிந்து கொள்ளும். அது போல் கூட்டை கைப்பற்ற, பெரும் சண்டையும் நடக்கும்.
இது, நீண்டு வளைந்த வயிற்றுப்பாகத்தை உடையது. அதன் அடியில் கொக்கி போன்ற அமைப்பு இருக்கும். இந்த கொக்கியே, சங்கு கூடுகளை பற்றிக் கொள்ள உதவும்.
இவ்வகை நண்டு, 32 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதாக தெரிய வந்துள்ளது. இந்த உயிரினத்தின் உடலில் ஆயிரக்கணக்கான கண்கள் இருக்கும்.
- அ.முகைதீன் அசாருதீன்

