தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தாயே சொர்க்கம்!

தாயே சொர்க்கம்!

தாயே சொர்க்கம்!


PUBLISHED ON : ஜன 04, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஆன்மிகக் குருவைச் சந்தித்தான் பாண்டியன்.

''சுவாமி, நான் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புகிறேன். அதற்காக, நான் வாழும் நாளிலேயே, என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டேன். இதற்காக, நான் என்னென்ன விரதங்கள் இருக்க வேண்டும்? எந்தெந்த நாட்களில் இருக்க வேண்டும்? எந்த மாதிரியான யாகங்கள் செய்ய வேண்டும்? எந்தெந்த புண்ணியத் தலங்களுக்கெல்லாம் செல்ல வேண்டும்? எந்தெந்த புண்ணியத் தீர்த்தங்களில் எல்லாம் புனித நீராட வேண்டும்? யார் யாருக்கு என்னென்ன தரும காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டும்? என்பதைத் தெளிவாக, எடுத்துக் கூறுங்கள்,'' என்று அவரை வணங்கி கேட்டுக் கொண்டான்.

குரு அவனைக் கூர்ந்து கவனித்தார்.

''உன்னைப் பெற்ற தாய் உயிரோடு இருக்கிறாரா?'' என்று கேட்டார்.

''இருக்கிறார்... ஆனால், நான் அவர்களோடு இல்லாமல், என் குடும்பத்தோடு தனியாக இருக்கிறேன். நான் அவர்களை சரியாக கவனிப்பதில்லை,'' என்றார்.

''உன் தாய்தான் சொர்க்கம். நீ அவர்களை கவனிக்காமல் இருப்பதால், இப்போது நீ மிகப்பெரிய பாவியாக இருக்கிறாய். இப்போது நீ இறந்தால் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வாய். எந்த யாகமும், தருமமும், வணக்கமும், புனிதமும் உன்னை சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லாது!''

''ஐயோ! சுவாமி!''

''ஆமாம்! உன்னை ஈன்றெடுத்த உன் தாய்தான் உன் சொர்க்கம். நீ சற்று முன்னே சொன்ன அத்தனை நல்ல காரியங்களையும் இன்முகத்தோடு, உள்ளன்போடு அவருக்குச் செய்... நீ நிச்சயம் சொர்க்கம் செல்வாய்!'' என்றார் குரு.

சாட்டையில் அடிவாங்கியதைப் போல் உணர்ந்தான் பாண்டியன். உடனே, தாயின் இருப்பிடம் நோக்கி ஓடினான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us