PUBLISHED ON : ஜூலை 17, 2015

ஒரு காளைமாடு தப்பித்து காட்டுப் பக்கம் ஓடியது. எதிரே சிங்கம் வந்தது. அதுவரை சிங்கத்தைப் பார்த்திராத மாடு, 'நீ யார்?'' என்று கேட்டது.
'நான் விலங்குகளின் அரசன் சிங்கராஜா. என்னை யார் என்று கேட்குமளவு நீ பெரிய ஆளா?''
மனதுக்குள் நடுக்கம் பிடித்தது காளைக்கு. இருப்பினும் சமாளித்துக் கொண்டு, 'நானும் பலசாலிதான்!'' என்றது.
'எப்படி?''
'இந்தப் பாறையில் நான் உதைத்தால் தீப்பொறி பறக்கும்,'' என்றது.
'சும்மா உதார் காட்டாதே!'' என்றது சிங்கம்.
'இப்போது பார்!'' என்றபடி காளைமாடு தன் பின்னங்காலால் அங்கிருந்த பாறையை உதைத்தது. உடனே தீப்பொறி பறந்தது. அதன் கால்களில் அடிக்கப்பட்டிருந்த லாடம் பாறையில் உராய்ந்ததுதான் இதற்குக் காரணம். அதை அறியாத சிங்கம், மாட்டுக்கு வந்தனம் கூறி வந்த வழியே திரும்பியது.
பிரெயின் இருந்தால் போதும் குட்டீஸ் எந்த ஆபத்தையும் சமாளிக்கலாம்.
***
