PUBLISHED ON : பிப் 10, 2017

அ நிறம் | அளவு
கிரீனி... கிரீனி... வடா!
செய்முறை: பச்சை பட்டாணி - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பொருட்களுடன் கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன் கலந்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், ஐந்தே நிமிடங்களில், சுவையான பச்சை பட்டாணி வடை தயார்.
உங்க குட்டீஸ்களுக்கு கொடுத்து அசத்துங்கள். இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இவற்றில், வைட்டமின் ஏ,சி,இ உள்ளது. இதயத்திற்கு மிகவும் நல்லது; ஞாபக சக்தி அதிகரிக்கும்.
-என்.சாந்தி, கொளத்தூர்.
