தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/என் பெயர் ரேடார் ரேஞ்ச்!

என் பெயர் ரேடார் ரேஞ்ச்!

என் பெயர் ரேடார் ரேஞ்ச்!


PUBLISHED ON : செப் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைக்கு நான் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். பெண்களுக்கு நான் அவ்ளோ உபயோகமா இருக்கேன். ஏன் ஆண்கள், சிறுவர்களுக்கு கூட நான் மிகவும் உதவியாக இருக்கேன். அவங்க கூட என்னை 'யூஸ்' பண்றாங்க தெரியுமா?

என்னது நான் யார்னு தெரியாம முழிக்கிறீங்க தானே... நான் பிறந்த கதையை சொல்றேன் முடிஞ்சா என்னை கண்டுபிடிச்சிக்கோங்க!

1940ம் ஆண்டு பிரிம்மிங்ஹாம் பல்கலைக் கழகம், ராணுவத்தில் உள்ள தகவல் தொடர்பு சாதனமான ராடார் என்ற கருவியில் பொருத்துவதற்காக ஒரு மின்னணுக் குழாயைக் கண்டறிந்தது. அதன் பெயர் மேக்னட்ரான்.

இந்த மேக்னட்ரான் குழாய்களை உருவாக்குவதில் பிரிம்மிங்ஹாம் பல்கலைக் கழகத்துடன் ராய்தியான் என்கிற அமெரிக்க நிறுவனம் ஒன்றும் போட்டியிட்டுத் தயாரிக்கத் துவங்கியது.

இந்தக் கம்பெனியின் பொறியாளர்களில் ஒருவராகப் பணியாற்றி வந்தார் பெர்ஸி என்பவர். அவர் இந்த மேக்னட்ரான் குழாய்களைக் கவனமாக ஒரு சமயம் பரிசீலனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதை தற்செயலாகத் தன்னுடைய சட்டையின் பாக்கெட் அருகே கொண்டு போனார். எதிர்பாராத விதமாக அவர் சட்டைப் பையில் வைத்திருந்த சாக்லெட் ஒன்று உருகத் துவங்கியது.

ஆனால், எந்தக் கதிர் வீச்சும், எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை என்று அறிந்த அவர் ஆச்சர்யப்பட்டுப் போனார். சாக்லெட் உருகியதற்குக் காரணம் மேக்னட்ரானின் கதிர் வீச்சுத்தான் என்பது அவருக்குப் புரிந்தது.

அவருடைய மனதில் உடனே புதிய யோசனை ஒன்று தோன்றியது. சில மக்காச்சோளக் கதிர்களை வெளியிலிருந்து கொண்டு வந்து மேக்னட்ரான் குழாயின் மேல் காண்பித்தார்.

அந்தப் பச்சைக் கதிர்கள் பொரிய ஆரம்பித்தன. இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட அவர் முட்டைகளைக் கொண்டு வந்து அதன் கதி என்ன என்று சோதித்தார்.

முட்டைகள் வேகமாக வெந்தன. பின் வெடிக்கத் துவங்கின. இதுவே அவருக்கு வேகமாகச் சமைக்கும் முறையைக் கண்டறியத் தூண்டுகோலாக இருந்தது. மேலும், சோதித்து வேகமான சமையல் முறையைக் கண்டறிந்தார்.

இதன் பின்னர் இவருடைய நிறுவனம் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் ரேடார் ரேஞ்ச். இதுவே உலகின் முதல் மைக்ரோ அவன் அடுப்பாக இருந்தது மேக்னட்ரான் குழாய்கள்தான் என்றால் வியப்பதற்கில்லை.

இதுவே நாளடைவில் மெல்ல மெல்லமாறுதலுக்கு உள்ளாகித் தற்போதுள்ள மைக்ரோ அவன் அடுப்பாகப் பரிணமித்தது.

அப்பா... இப்போ தெரிஞ்சிகிட்டீங்களா குட்டீஸ் நான் யார் என்று!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us