
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
நார்த்தங்காய் - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
உளுந்தம் பருப்பு, கடுகு, உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூடானதும், விதை நீக்கிய நார்த்தங்காய் சதை, துண்டாக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும். அதில், கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து போடவும். சுவைமிக்க, 'நார்த்தங்காய் சட்னி' தயார்!
சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம்; அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
- ஜெயந்தி சரவணன், மதுரை.

