PUBLISHED ON : அக் 31, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
நேந்திரன் வாழைக்காய் - 5
பால் - தேவையான அளவு.
செய்முறை:
நேந்திரன் வாழைக்காயை சுத்தம் செய்து, இருமுனைகளையும் வெட்டி, தோலை உரித்து, அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைக்கவும். பின், அரைத்து, சலித்து, காற்று புகாத புட்டியில் அடைக்கவும்.
இதில் ஒரு மேஜைக்கரண்டி பொடியை, சூடான பாலில் கலக்கவும். இனிய, 'நேந்திரன் பானகம்' தயார்.
மிதமான சூட்டில், சிறுவர், சிறுமியருக்கு கொடுக்கலாம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்; செரிமானத்திற்கும் உதவும்.
ஆர்.ருக்குமணி, சிதம்பரம்.
தொடர்புக்கு: 95850 57428
